திருப்பதி கோவிலுக்கு நடந்து வராதீர்கள்!! - சேகர் ரெட்டி பேட்டி..!

       -MMH


   திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி நியூஸ் 18 செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது, கொரனா நோய்த்தொற்று முடிவடைந்த பிறகு திருப்பதிக்கு அதிக பக்தர்களை அனுமதிக்க முடியும். அதுவரை தினசரி 13000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.


    துவக்கத்தில் நாளொன்றுக்கு 300 ரூபாய் டிக்கெட் 5,000 பேருக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது 13,000 முதல் 14,000 டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நோய் தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதியில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி நடந்து செல்பவர்களுக்கு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மலையடிவாரம் வரை பக்தர்கள் நடந்து சென்று பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி அனுப்பப்படுகின்றனர். எனவே யாரும் நடந்து செல்ல வேண்டாம்.


    300 ரூபாய் டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதிக்கு வாருங்கள் என சேகர் ரெட்டி தெரிவித்தார். அதேபோல சென்னை டி நகர் இருந்திருக்கக்கூடிய சின்ன திருப்பதி என்று அழைக்கக்கூடிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த சனிக்கிழமை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது அந்த அளவிற்கு கூட்டம் அதிகரித்திருப்பதாக கூறினார்.


-ஸ்டார் வெங்கட்.


Comments