பொள்ளாச்சி பகுதி கிசு!! கிசு...!!

     -MMH


பொள்ளாச்சி கிசு கிசு ...!!


ஞானி : எனனா... வெயிலு என்னா வெயிலு ....!!


மெய்ஞானி : போனவாரம் மெல்லாம் அடமழையா இருந்துச்சு இப்ப பாத்த சட்டுனு மழை போய்... வெயிலு வெளுத்து வாங்குது .


ஞானி : ஆமா..பா.. நீ கரெக்ட்டா ... சொன்ன ...அடிக்கற வெயிலுல வேலைக்கு போன பக்கம் நிக்கவே முடியல...


மெய்ஞானி :அது சரி..., நீ எங்கப்பா வேலைக்கு போன?


ஞானி : அட...ஆமா...பா..நா என்ன உன்ன மாரி நாலு எழுத்து படிச்சா இருக்க நா எதோ காட்டு வேலை , கூலி வேலை அதுவும் இல்லயா...நம்ம மத்திய அரசாங்கத்தோட 100 நாள் வேலைனு போய் என் வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கற...


மெய்ஞானி : ஓகோ அப்படியா ... உன் 100 நாள் வேலைய பத்தி கொஞ்சம் சொல்லே கேப்போம் .


ஞானி : வேலை என்னவோ கஷ்டத்தோட கஷ்டமா நல்லதா இருக்கு ...ஆனா...


மெய் ஞானி : ஆனா...என்னப்பா...!


ஞானி : காலையில் 9.00 மணில இருந்து மதியோம் 3.00 மணி வரைக்கும் நாங்க முட்டி தேய வேலை செய்யரோ ஆனா சிலர் கட்டின வேட்டி மடிப்பு கலையாம வீட்டுல இருந்தே 100 நாள் வேலைய செஞ்சு காச வாங்கிட்டு போறதுதா கொஞ்சம் கடுப்பாக்குதுபா....


மெய் ஞானி : வீட்டுல இருந்து 100 நாள் வேலையா .....!! என்னப்பா ஒளர்...?


ஞானி : நா...ஒன்னும் ஒலரல நடக்கறது சொன்ன...


மெய் ஞானி : அப்படி என்ன தா நடக்குது ....கொஞ்சம் புரியற மாறி தெளிவா சொல்லேன்...எனக்கு


ஞானி : அங்க நடக்கற கொடுமைய என்னனு சொல்ல ...100 நாள் வேலையில் அந்தந்த பகுதியோட பஞ்சாயத்து தலைவரு , அப்புறம் அந்த சூப்பர் வைசர் ஓட சொந்தபந்தங்களுகெல்லாம் வேலையாள் அடையாள அட்டைய வாங்கி கொடுத்தறாங்க...அவனுக பேருக்கு 1 நாள் கூட வேலைக்கு வாரதில்ல ஆனா வாரத்துல 5 நாளும் வேலைக்கு வரமாறி அரசாங்கத்துக்கு கணக்க காட்டி வர பணத்த இரண்டு பேரும் சரிசமமா பிரிச்சுக்கறாங்க....


மெய் ஞானி : இது என்ன புதுகைதையா... இருக்கு ...இதுபத்தி நீங்க உங்க மேல் அதிகாரிக்கு தெரிய படுத்தலாமே ...


ஞானி : அவங்களுக்கும் அரசல் புரசலா விஷயம் காதுல விழுந்தாலும் சம்மந்த பட்ட மத்திய அரசு அதிகாரிக காது வரைக்கும் விஷயம் போகாதனால இவங்க அநியாயத்துக்கு கல்லாட்டம் ஆடுறாங்க....


மெய் ஞானி : என்னதா மத்திய மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் இவங்க மாறி சில ஊழல் பேர்வழிகலால பொது நல திட்டம் எல்லாம் சுயநலகலந்த சுரண்டல் திட்டமா மாறி போறது வருத்தமாத இருக்கு ...


ஞானி : என்னபன்றது...பா... நீயும் நானும் இந்த அரசாங்கத்த நம்பி தான இருக்கோம் ஆனா இந்த அரசாங்கம் இந்த பாலபோன அதிகாரிகள நம்பி இருக்கு .... அரசாங்கத்த ஏமாத்தர அதிகாரிகளை சட்டுனு வேலையில இருந்து தூக்கினதா பயம் வரும்...அப்பதா அவங்க அரசாங்கத்துக்காகவும் அரசாங்கத்த நம்பி இருக்க மக்களுக்காகவும் ஒழுங்கா வேலை செய்வாங்க...என்ன நான் சொல்லறது ...


நாளைய வரலாறு செய்திகளுக்கு


-M.சுரேஷ்குமார் பொள்ளாச்சி,V. ஹரிகிருஷ்ணன்.


Comments