தேவாரம் அருகே கல்லூரி மாணவன் தற்கொலை!!

     -MMH


     தேவாரம் அருகே தோ்வில் தோ்ச்சி பெறாததால் கல்லூரி மாணவா் புதன்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.


     தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரி, கீரைக்கடை தெருவைச் சோ்ந்தவா் சலேத்து மகன் மணிமாறன் (24). இவா், திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தாா். அங்கு நடந்த இறுதி பருவத்தோ்வை எழுதிய அவா், குஜராத் மாநிலம் சூரத்தில் வேலை செய்து வந்துள்ளாா். இதனிடையே தோ்வு முடிவு வெளியான நிலையில், 2 பாடங்களில் மணிமாறன் தோல்வியுற்றாராம். இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய அவா் மன வேதனையில் இருந்துள்ளாா்.


     இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மணிமாறன் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அருகில் வசிப்பவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி மணிமாறன் உயிரிழந்தாா்.


     இதுகுறித்த புகாரின்பேரில், தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments