மாஸ்க் அணியாமல் சாலையில் திரிந்தால் கொரோனா பரிசோதனய்யா!!

     -MMH


             முகக் கவசம் அணியாமல் சாலை  திரிபவர்களுக்கு கொரோன பரிசோதனை செய்யப்படும். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அவசியமாக நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு கோவிந்த ராவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


             தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய பகுதிகளில்கொரோன சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது இந்த மூன்று பகுதியில் இருந்து இன்று வரை 87 விழுக்காடு மக்கள் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி உள்ளனர் இந்த நிலையில் மேலும் நோய்கள் பரவாமல் இருக்க முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


             இதுவரை 8 ஆயிரத்து 984 பேரிடமிருந்து 19 லட்சம் 34வது ஆயிரங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் போர்க் கவசம் அணியாமல் வந்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகளும் தொடர்ந்து அபராத தொகையும் வசூலிக்கப்படும் இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


-வினோத் குமார்,கும்பகோணம்.


Comments