கத்திரிக்காயின் நன்மை தீமைகள் !!

  -MMH


    உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி வகையை சார்ந்த கத்திரிக்காயை எக்பிளான்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. முட்டை வடிவத்தில் இருக்கும் காரணத்தினாலே இது எக்பிளான்ட் என்ற பெயரை பெற்றுள்ளது. கத்திரிக்காயில் புரதம், வைட்டமின் C, B6, தாதுக்கள், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன.


    “Every coin has two sides” என்ற ஆங்கில பழமொழிக்கு கத்திரிக்காய் சாப்பிடுவதால் நன்மைகள் ஏற்படுவது போலவே சில தீமைகளும் உள்ளது. எனவே கத்திரிக்காய் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


   செரிமான கோளாறு தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாகும்.இத்தகைய செரிமான கோளாறை சரி செய்யும் தன்மை கத்திரிக்காய்க்கு உண்டு. வாயு பிரச்சனையில் இருந்து விடுபட கத்திரிக்காயை சூப்பாகவோ அல்லது மசியலாகவோ செய்து சாப்பிடலாம்.


   உடலில் இயற்கைக்கு மாறாக உருவாகும் அதிகப்படியான அணுக்கள் காரணமாகவே புற்றுநோய் ஏற்படுகிறது. கத்திரிக்காயில் உள்ள ஊட்டச்சத்தானது பல வகையான புற்றுநோயில் இருந்து நம்மை காக்க உதவுகிறது. கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர புற்றுநோயில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.



   உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உண்மையில் உடல் எடையை குறைப்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு நிறைய பொறுமை தேவை. கலோரிகள் குறைவாக உள்ள கத்திரிக்காயை உடல் எடையை குறைக்க நேரடியாக பயன்படுத்தலாம்.


   இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு காரணமாக தான் நீரிழிவு நோய் உண்டாகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது பல வகையான நோய்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே இத்தகைய சர்க்கரையை கட்டுக்குள் வைத்திட கத்திரிக்காய் பெரிதும் உதவுகிறது.


   ஒருவரின் வயதை அறிந்து கொள்ள பெரிதும் உதவுவது அவரது தோற்றம் தான். மாறிவிட்ட வாழ்க்கை முறை காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுகிறது. தோல் சுருக்கம் நீங்க கத்திரிக்காயை அயைத்து ஃபேஷியல் செய்து வர சுருக்கம் விரைவில் குணமாகும்.


   அதிகப்படியாக புகைப்பிடிப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கத்திரிக்காய் ஒரு மாமருந்து. கத்திரிக்காயில் நிக்கோட்டின் உள்ளதால் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கத்திரிக்காயை வறுலாகவோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.



கத்திரிக்காயினால் ஏற்படும் பக்க விளைவுகள்:


   “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை நாம் எப்போதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இப்போது கத்திரிக்காயின் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்.


   கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப காலத்தில் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.


   கத்திரிக்காயை அதிக அளவில் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை உண்டாகும்.


   கத்திரிக்காய் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படும். எனவே கத்திரிக்காய்க்கு அலர்ஜி உள்ளவர்கள் இதனை சாப்பிட வேண்டாம்.


   கத்திரிக்காயில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளதால் இதனை அதிக அளவில் எடுத்து கொள்வதினால் வாந்தி, வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.



   புகைப்பழக்கத்தை விட நினைப்பவர்கள் கத்திரிக்காயை தாராளமாக சாப்பிடலாம். ஆனால் இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் கத்திரிக்காய்க்கு அடிமையாக நேரிடும்.


   எனவே கத்திரிக்காயின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்த நீங்கள் இதனை சரியான முறையில் சாப்பிட்டு பலன் அடையுங்கள்.


-சுரேந்தர் ,கோவை கிழக்கு .


Comments