இ-பாஸ் இருந்தால் மட்டுமே வால்பாறைக்குள் அனுமதி!!

    -MMH


          வால்பாறை, அக்.2: வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் அட்டகட்டியில் மீண்டும் சோதனைச் சாவடி அமைத்து இ-பாஸ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


           உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், வால்பாறைக்குச் செல்ல எந்தக் கட்டுப்பாடும் அறிவிக்கப்படவில்லை.          இதனால் கடந்த சில நாள்களாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வால்பாறை பகுதிக்கு வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்ததால் வால்பாறையில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. நகர் பகுதியில் வசிப்பவர்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.


         இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் அட்டகட்டியில் மீண்டும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். வெள்ளிக்கிழமைமுதல் இ-பாஸ் இருந்தால் மட்டும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வால்பாறைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments