பொள்ளாச்சியில் மூங்கில் கூடை செய்யும் தொழிலாளிகளின் அவல நிலை!!

    -MMH


           பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மூங்கில் கூடை செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். தற்போது பெருகி வரும் பிளாஸ்டிக் டப்பாக்களின் பயன்பாடு,அவற்றின் விலை குறைவு ஆகிய காரணிகளால் மக்கள் அதிக அளவில் இந்த பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துகின்றனர்.


          இதனால் மூங்கிலை கொண்டு கூடை, முறம் போன்றவற்றின் பயன்பாடு மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த மூங்கில் தொழிலை இந்த கோரோன ஊரடங்கு மேலும் அவர்களின் தொழிலை நளிவடைய செய்துள்ளது என்ரே கூற வேண்டும்.


          இது குறித்து அவர்கள் கூறுகையில் உடலுக்கு நன்மையை மட்டும் செய்யும் இந்த மூங்கில் கூடைகள் முரங்கள் மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதன் பயன்கள் மிகவும் பெரியது.அழிவின் பிடியில் இருக்கும் இந்த தொழிலை மீட்டு எடுக்க மக்களும் அரசாங்கமும் எங்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என்று கூறுகின்றனர்.


         கண்ணை கவரும் பிளாஸ்டிக் டப்பாக்களையும், உடலுக்கு ஊரு விளைவிக்கும் பிளாஸ்டிக் முரங்களையும் மக்கள் தவிர்த்து இயற்கை சார்ந்த இந்த மூங்கில் பொருள்களை பயன்படுத்திட வேண்டும்.


          மக்களை மட்டுமே நம்பி வாழும் எங்களையும் எங்கள் தொழிலையும் அழியாமல் பாதுகாக்க மக்கள் அதிக அளவில் மூங்கில் பொருள்களை பயன்படுத்தி வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர்.நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments