ரேஷன் கடைகளிலிருந்து தந்த மருந்துகள் சாப்பிடும் முறை!! -அதிகாரிகள் விளக்கம்!!

     -MMH


     ரேஷன் கடையில் தந்த மருந்து எப்படி சாப்பிடணும் தெரியுமா?.. - அரசு சார்பில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை, சாப்பிடும் முறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


     மத்திய, மாநில அரசுகள் சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மருந்துகள் அடங்கிய 'கிட்' ரேஷன் கடைகள் வாயிலாக, பொதுமக்களுக்கு வழங்கப் படுகிறது.


     சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு இந்த 'கிட்' வழங்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை சாப்பிடும் முறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:"100 மி.கி., வைட்டமின் மாத்திரையை, தினசரி ஒருவேளை என, 10 நாட்கள் சாப்பிட வேண்டும் ஜிங்க் 50 மி.கி., மாத்திரையை, பெரியவர்கள் ஒன்றும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதியும், தினசரி ஒரு வேளை என, 10 நாட்கள் சாப்பிடவேண்டும்.


     ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளை தினசரி மூன்று வீதம், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். கபசுர குடிநீர் பொடி ஒரு டீ ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பெரியவர்கள், 50 மில்லி, முதல், 100 மில்லி குடிக்கலாம். 20 கிலோ உடல் எடை கொண்ட சிறியவர்கள், 20 மில்லி குடிக்கலாம்.ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் குடிக்க வேண்டாம். கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடிப்பதால், எந்த பக்கவிளைவும் ஏற்படாது. சுயமாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், மருத்துவரின் அறிவுரைப்படி செயல்படவேண்டும்".இவ்வாறு, அவர்கள் கூறினர்.


-ஈஷா,கோவை.


Comments