டிவைடர் மூலம் விபத்துகள்!! - சரி செய்யுமா நிர்வாகம்!!

     -MMH


     கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஈஸ்வர் நகர் அருகில் நேற்றைய தினம் பெட்ரோல் ஏற்றி அந்த வழியாக வந்த லாரி ஒன்று அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய டிவைடர் மேல் மோதி முன்பாகம் அதிக அளவில் சேதம் அடைந்தது.


     இந்த சம்பவம் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதாக அங்குள்ள பொதுமக்கள் கூறுகிறார்கள். அருகில் அப்போலோ மருந்தகம் இருப்பதாகவும் அங்கு டூ-வீலர் ஃபோர் வீலர் பார்க்கிங் செய்வதாகவும் அங்கிருந்து அருகில் இருக்கும் பேக்கரி வரை இருக்கக்கூடிய சாலை குறுகியதாக இருப்பதாகவும் டிவைடர் இருப்பதினால்  அடிக்கடி விபத்து நடைபெறுகிறது என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.     இந்தப் பகுதியில் மாலை நேரங்களில் அதிகமான வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டம்  இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஈஸ்வர்  நகரிலிருந்து அருள்முருகன் நகர் வரை இருக்கக்கூடியஅந்த டிவைடர் வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது இது போன்ற விபத்துகள்  நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல்  இருக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு உயிர்ச்சேதம் வருவதற்குள் அந்த டிவைடர் அமைப்பை சரி செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதிவாழ் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-ஈஷா,கோவை.


Comments