திருமாவளவனை கண்டித்து பாஜக போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட நடிகை குஷ்பு கைது..!!

     -MMH


     திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்ட  நடிகை குஷ்பு கைது......!!! -


     திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்ட நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இணைய வழி கூட்டம் ஒன்றில் பேசும்போது, மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாக பேசிய வீடியோ சமூக ஊடங்கங்களில் பகிரப்பட்டது. இதனிடையே, இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, தொல்.திருமாவளவனைகண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் பா.ஜ. க. வினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர். திருமாவளவனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.


     இதையடுத்து, திருமாவளவன் எம்.பி-யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இது, சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் காவல் துறை ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்தது.இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டு சென்ற குஷ்புவை போலீசார் முட்டுக்காடு அருகே கைது செய்துள்ளனர். மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸ் குஷ்புவை கைது செய்த நிலையில்,அவர் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments