பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தீயணைப்பு ஒத்திகை!!

   -MMH


                கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்தது,அது முட்டுமின்றி தற்போது சூரிய வெப்பமும் வெயிலும் அதிகம் ஆகி உள்ளது,அடுத்த நவம்பர் மாதமும் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் ,வரும் காலகட்டத்தில்,கனமழை மற்றும் தீ போன்ற விபதுகளை தடுப்பது ,தவிர்ப்பது எப்படி என்றும் இது போன்ற பேரிடர்களை நாம் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கும் வகையிலும் செய்முறை உடனும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய செயல்கள் எப்படி,பேரிடரின் போது கையாள்வது பற்றி பொது முதற்கட்டமாக பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தாசில்தார் தணிகை வேல் துவங்கி வைத்தார்.



                   பொள்ளாச்சி தீயணைப்பு அலுவலர் புருஷோத்தமன் முன்னிலையில் சுமார் 10 -க்கு மேட்டப்பட்ட வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர் அதில் 1.மழைக்காலங்களில் நீர் அதிகம் தேங்கினால் குறிப்பாக தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை எப்படி காப்பாற்றுவது 2.உயர்த்த கட்டடங்களில் தீ பிடித்தால் ,எந்த உயரணங்கள் கொண்டு தீயை அணைக்க வேண்டும், அங்குள்ள மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்.3.கட்டட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை எப்படி நாம் காப்பாற்ற வேண்டும், முதலுதவி அளிக்க வேண்டும்.



                 4.வாகன விபத்துகள் நடைபெறும் போது அவர்களுக்கு நாம் முதலுதவி அளித்தல் மற்றும் ஆம்புலன்ஸ் அழைப்பது போன்ற உண்மை சம்பவங்களை உருக்கமாக நடித்து காட்டினார் வீரர்கள.இதையடுத்து பேரிடர் காலத்தில் தங்களை காத்து கொள்வது பற்றி ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏட்படுத்தினர். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருத்த மக்கள் அனைவரும் வியப்புடனும் விழிப்புணர்வுடன் வீரர்கள் செய்யும் ஒத்திகையை கண்டு வியந்தனர்.


நாளையவரலாறு செய்திக்காக,


-ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.


Comments