வால்பாறை அருகே விபத்து!! -கணவர் கண் எதிரே மனைவி பலி!!

     -MMH 


     கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை கோனி முடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ராமானுஜம் மற்றும் அவரது மனைவி விமலா ஆகிய இருவரும் வால்பாறைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பும் வழியில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்ட நேரத்தில் விபத்து ஏற்பட்டது.


     இதில் கணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கணவனின் கண் எதிரே மனைவி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இன்னும் சில தினங்களில் அவர்களது வீட்டில் ஒரு திருமண நிகழ்வு  நடக்க இருக்கிற நிலையில் இந்த விபத்து சொந்த-பந்தங்கள் மட்டுமின்றி வால்பாறையில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments