தனியார் மருந்து கடையை அகற்றிய ஆர்.டி.ஓ.அலுவலர்கள்..!

     -MMH


வாடகை செலுத்தாத தனியார் மருந்து கடையை ஆக்கிரமிப்பு செய்த கோவை வடக்கு ஆர்டிஓ அலுவலர்கள்


கோவை துடியலூரில் உள்ள டியூகாஸ் என்ற துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் தனியார் மருந்து கடை செயல்பட்டு வந்தது. இந்த மருந்து கடை உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் கடையை நடத்தி வந்தனர். தகவலறிந்த டியூகாஸ் நிறுவனத்தினர் கோவை வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் செய்த நிலையில், அதனை தொடர்ந்து கோவை வடக்கு ஆர்டிஓ சுரேஷ் அவர்கள் தலைமையில் சென்ற வாரம் அந்த தனியார் மருந்து கடைக்கு சீல் வைத்து சென்றனர். 


 


டியூகாஸ் நிறுவனத்தினர் மருந்து கடை உரிமையாளரிடம் பல முறை கடையை காலி செய்ய வலியுறுத்தியும், கடையை காலி செய்யாததால் நேற்று  மாலை கோவை வடக்கு ஆர்டிஓ சுரேஷ் அவர்களின் தலைமையில் அந்த கடையை காலி செய்து கடைகளில் உள்ள மருந்து பொருட்களை அகற்றி கடையை ஆக்கிரமிப்பு செய்து கடைக்கு சீல் வைத்தனர். உடன் தலைவர் சின்னவேடம்பட்டி சுப்பையன் துணை தலைவர் செல்வராஜ் இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் விஜய் சக்தி மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.


-சீனி போத்தனூர்.


Comments