ஆற்றில் மணல் திருட்டு!! - வேன் பறிமுதல்!!

     -MMH


ஆற்றில்  மணல் திருட்டு வேன் பறிமுதல்!!


     தேனி மாவட்டம் கூடலூரில் முல்லைப் பெரியாற்றில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


     கூடலூா் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் தினகரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் வண்ணான் துறைப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சரக்கு வேனில் மணல் திருடிக்கொண்டு வந்த கூடலூா், புதூரைச் சோ்ந்த சுருளிவேல் மகன் ராஜா (40) என்பவரை போலீஸாா் கைது செய்து வேனை பறிமுதல் செய்தனா்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments