கொரோனாவை பரப்பும் ரூபாய் நோட்டுகள்!! - ரிசர்வ் வங்கி தகவல்!!

   -MMH


             புதுடில்லி: கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் வாங்கி உறுதிப்படுத்தியதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.


            ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்பதை தெளிவுப்படுத்தக் கோரி 2020ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியது. இந்த கடிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவக்கூடும் என்றும், இதனால், ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது. இந்த செய்தியை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



           ரிசர்வ் வங்கி மேலும் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கி முறைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற பல்வேறு ஆன்லைன் டிஜிட்டல் சேனல்கள் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பணம் செலுத்தலாம். முடிந்தவரை பணத்தை பயன்படுத்துவதை அல்லது திரும்பப் பெறுவதைத் தவிர்க்கலாம்,' என்று தெரிவித்துள்ளது.


           மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு 'ஊக்கத்தொகை' திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தரப்பில் நிர்மலா சீதாராமனிடம் கோரப்பட்டிருந்தது. இது குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் வங்கி கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மேலும் வங்கி கட்டணங்களுக்கு பதிலாக அரசாங்கம் நேரடியாக வங்கிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். சில காலம் கழித்து, அத்தகைய மானியம் அரசாங்கத்திற்கு நிதிச் சுமையாக இருக்காது; மறுபுறம், இது வங்கி நோட்டுகளை அச்சிடுவதற்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது,ஹனீப் திருப்பூர்.


Comments