ஒரே விவசாயிக்கு அதிகளவு உரங்களை விற்க கூடாது!! - வேளாண்துறை!!

     -MMH


     சூலுார்:ஒரே விவசாயிக்கு அதிக அளவில் உரங்கள் விற்றால், உரிமம் ரத்து செய்யப்படும் என, வேளாண்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


     கோவை மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், போதியளவு, கூட்டுறவு சங்கங்களிலும் தனியார் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உர விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:


     "விற்பனையாளர்கள், கடைகளில் அறிவிப்பு பலகைகள் வைத்து, அதில், உரங்களின் இருப்பு விபரங்களை பதிவு செய்து விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும். விலைப் பட்டியலை எழுதவேண்டும். அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலைக்கு மேல் விற்க கூடாது. விவசாயி அல்லாதோருக்கு விற்க கூடாது. ஒரே விவசாயிக்கு அதிகளவில் உரங்களை விற்கக் கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது.உர இருப்பு பதிவேடுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.உரங்களை விற்கும் போது,கூடுதலாக பிற உரங்களை வாங்குமாறு, விவசாயிகளை கட்டாயப் படுத்தக் கூடாது. இந்த வழிமுறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது, உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்."இவ்வாறு, வேளாண் அதிகாரிகள் கூறினர்.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments