இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக குளிரை எதிர்பார்க்கலாம்!! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

     -MMH 


     நடப்பாண்டு குளிர் பாதிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குனர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.


     ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தின் தீவிரத்தை அறிவிக்கும் குளிர்கால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.



     அதன்படி தற்போதைய வானிலை நிலவரம் காரணமாக நடப்பாண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட குளிர் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.



     இதுதொடர்பாக இணையவழிக் கருத்தரங்கில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய நிர்வாக இயக்குனர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா, " கடற்பரப்பில் நிலவும் 'லா நினா வானிலை' நிலைமை காரணமாக, இந்த ஆண்டு அதிக குளிரை எதிர்பார்க்கலாம்." என்றார்.லா நினா என்பது பசிபிக் கடலின் குளிர் நிலையை விவரிக்கும் ஒரு காலநிலை முறை.



     குளிர்ந்த அலைகளால் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான இறப்புகள் ஏற்படலாம் என எச்சரித்த மொஹாபத்ரா அதிகபட்ச குளிருக்கு ஒழுங்கற்ற வானிலையே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு, இந்தியா ஒன்பது சதவிகிதம் அதிக மழைப் பொழிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


-ஸ்டார் வெங்கட்.


Comments