வழி தவறி வந்த சீன வீரர் உளவாளியா.. ❓❓

     -MMH


      கடந்த சில நாட்கள் முன்பு லடாக்கில் வழிதவறி வந்த சீன வீரரை இந்தியா மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்த நிலையில் அவர் உளவாளியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


      கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய - சீன எல்லையில் தனியாய் திரிந்த சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவம் கைது செய்தது. விசாரணையில் அவர் வழிதவறி வந்ததாக தெரிய வர பிறகு அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த இந்திய ராணுவம் அவரை சீனாவிடம் திரும்ப ஒப்படைத்தது.


      இந்நிலையில் அவர் பிடிபட்ட போது அவரிடம் செல்போன், தகவல்களை சேமிக்கும் கருவி, படுக்கை உள்ளிட்டவை இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் வந்தவர் வழிதவறிதான் வந்தாரா அல்லது உளவு பார்க்க ஏற்பாடுகளுடன் வந்த ஆளா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments