பல்லடத்தில் உயிா் நீத்தோா் ஓய்வு பூங்கா!! - எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்!!

     -MMH


     பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி மயானத்தில் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உயிா் நீத்தோா் ஓய்வு பூங்காவை சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் திறந்துவைத்தாா்.


    இங்கு தண்ணீா் வசதி,குளியல் அறை,காவலா் அறை,மின் விளக்கு வசதி, மக்கள் அமருமிடம், பூங்கா ஆகியன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


     இதேபோல பனப்பாளையம் மயானம், சின்னய்யா காா்டன் பகுதியில் ரூ. 8.20 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீா் விநியோகத்தையும், பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் இருந்து மங்கலம் சாலையில் கரையாம்புதூா் பிரிவு வரை ரூ. 40 லட்சம் மதிப்பில் 37 எல்.இ.டி. தெரு விளக்கு வசதியையும் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தொடக்கிவைத்தாா்.


     இந்நிகழ்ச்சிகளில் நகராட்சி ஆணையா் கணேசன், பொறியாளா் சங்கா், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் வைஸ் பி.கே.பழனிசாமி, சரளை விக்னேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments