வால்பாறையில் கடும் மண்சரிவு!! - மக்கள் அபாயம்..!!

     -MMH 


     மண் சரிவால் சேதமடைந்து காணப்படும் அம்பளப்பாறை சாலை.மண் சரிவு காரணமாக வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இருந்து சாலக்குடி வரையில் கனரக வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


      பொதுமுடக்கம் தளா்வுக்குப் பின் தற்போது கேரள மாநிலம், சாலக்குடியில் இருந்து கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கேரள எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் வரை அந்த மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனால் மழுக்குப்பாறை, அம்பளப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சாலக்குடி சென்று வருகின்றனா்.கடந்த ஆண்டு பெய்த கனமழையால் அம்பளப்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.


     இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன் மீண்டும் அதே பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் மழுக்குப்பாறை எஸ்டேட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments