கோவை சுண்டக்காமுத்தூரில் மகப்பேறு பிரிவு துவக்கம்..!

     -MMH


      கோவை சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு துவக்கம்! கிராமப்புற கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் கோவை சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதால், 3லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கியது ஜமாத் அமைப்பு.


  கோவை  அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் ரூ.90லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்கள் பயன்பெரும் வகையில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு துவக்கபட்டது.சுண்டக்காமுத்தூர், கோவைபுதூர், பேரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை சுண்டக்காமுத்தூர் மற்றும் ஜமாத் அமைப்புகள் சார்பில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு துவக்கவிழா இன்று நடைபெற்றது. 


    இதில் நல்லறம் அறக்கட்டளை நிருவனரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மகப்பேரு புறநோயாளிகள் பிரிவினை துவக்கி வைத்தார்.இதனையடுத்து கோவை பி.கேபுதூர் ஜமாத் அமைப்புகளின் சார்பில் மகப்பேறு மருத்துவத்திற்காக ரூ.3லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டார்.


    முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உரையாற்றினார்.அப்போது சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையானது கடந்த சில வருடங்களில் தரம் உயர்த்தபட்டுள்ளதாக தெரிவித்தவர் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜமாத அமைப்பினருக்கு நன்றி தெரிவித்ததுடன் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments