சர்வதேச மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி! !- ஆன்லைன் மூலம் நேற்று துவங்கியது!!

         -MMH 


      சர்வதேச மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!


     சர்வதேச மனநல நாளை முன்னிட்டு, பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியில் ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.கல்லுாரியின் உளவியல் துறையின் உளவியல் கூட்டமைப்பு சார்பில், 'அனைவருக்குமான மன ஆரோக்கியம்' என்ற தலைப்பில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆன்லைன் மூலம் நேற்று துவங்கியது.


     முதல் நாளான நேற்று பொருளாதார நிபுணர் சந்தியா, 'மனநல விழிப்புணர்வு வழிமுறைகள்' என்ற தலைப்பில் பேசினார். இன்று, 'மனநலம் மற்றும் மீடியா ' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, 'மன ஆரோக்கியத்தில் சுய பாதுகாப்பு அதிசயங்கள்' என்ற தலைப்பில், பெண்கள் சுகாதார பாதுகாப்பு மற்றும்  உடற்பயிற்சியாளர் டாக்டர் சுரேகாகுமார் கலந்துரையாடுகிறார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உளவியல் துறை தலைவர் ஜோதிமணி, உதவி பேராசிரியர் புனிதாவதி ஆகியோர் செய்துள்ளனர்.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments