லெட்டர்பேடு கட்சிகளால் மக்களுக்கு பிரச்னை!! ஐகோர்ட் கிளை கருத்து..

     -MMH


     மதுரை லெட்டர் பேடு கட்சிகளால், மக்கள் பிரச்னைகளை சந்தித்து வருவதால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேவைப்படுகிறது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலர் தமிழ்நேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் திருச்சியில் இயங்கி வரும் ஆக்சிஜன் காஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என தெரிவித்திருந்தார்.


    இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தும் தமிழ்நேசனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.


 மேலும் மனுதாரரின் கட்சி அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரம் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி துவங்க அனுமதிக்க வேண்டும். லெட்டர்பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத சில லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. இத்தகைய கட்சிகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்சி துவங்க எதன் அடிப்படையில் தேர்தல் அனுமதி வழங்குகிறது எனக்கேள்வி எழுப்பி எதிர்மனுதாரராக தேர்தல் ஆணையம், உள்துறை ,சட்டத்துறை சேர்த்தும் அவர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.


நாளையவரலாறு செய்திக்காக,


-HM,முஹம்மது ஹனீப் ,திருப்பூர்.


Comments