தமிழக வேளாண்மைத் துறை அமைச்சருக்கு திடீர் மூச்சுத்திணறல்..!

    -MMH


 தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.


   தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார்.  கட்சி தொண்டர்கள், குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரில் உடல் தகனம் செய்யப்பட்டது.


 தாயை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரை முக ஸ்டாலின், தமிழக ஆளுநர் உட்பட அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் காரில் சேலம் புறப்பட்டார்.
சென்னையில்
 இருந்து வந்த கார்  திண்டிவனம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அமைச்சருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


 மருத்துவர்களின் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு அமைச்சர் அவர்களின் நெஞ்சுவலி சரியானது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.


-சோலை,சேலம்.


Comments