ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்!! - பொள்ளாச்சி சார் ஆட்சியர் அறிவுறுத்தல்!!

     -MMH


     ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்! ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் அறிவுரை...!!! - 


     "ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,'' என ஆலோசனை கூட்டத்தில், சப்-கலெக்டர் அறிவுறுத்தினார்.பொள்ளாச்சியில் இருந்து, மொபட் உள்ளிட்ட வாகனங்களில், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு, 'டிமிக்கி' கொடுத்து, நுாதன முறையில்மூட்டை,மூட்டையாக அரிசி கடத்தப்படுகின்றன.


     இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகா குடிமைப்பொருள் தனித்தாசில்தார்கள், குடிமைபொருள் வருவாய் ஆய்வர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கடந்த மாதம் ஒவ்வொரு தாலுகாவிலும் எவ்வளவு ரேஷன் அரிசி பிடிக்கப்பட்டது; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்பட்டது.


     வால்பாறையில் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளதால், ரேஷன் கடைகளில் அரிசி இருப்பு வைத்து பொதுமக்களுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.சப்-கலெக்டர் வைத்திநாதன் பேசியதாவது:"ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க, அதிகாரிகள் குழு தொடர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். பொள்ளாச்சி பகுதியில், 4,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மற்ற பகுதிகளிலும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.ரோந்து பணி சென்று, ரேஷன் அரிசி கடத்துபவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, எந்த வழித்தடத்திலும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


-ஈஷா,M.சுரேஷ் குமார்.கோவை.


Comments