பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்!! - கோவை ஆணையாளர் அறிவுறுத்தல்!!
-MMH
கோவையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க ஆணையாளர் அறிவுறுத்தல்.
கோவையில் குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, சாலைப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பண்டியன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ரகுபதி, நிர்வாக பொறியாளர் லட்சுமணன், ஆலோசகர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, 91-வது வார்டு மற்றும் 87- வது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை நீர் உந்துநிலையம் கட்டுமான பணிகள், சுகுணாபுரம் மேற்கு இட்டேரி வீதியில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் அத்துடன் அவர் கோவைப்புதூர் அசோக்நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், சிறுவாணி நகரில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதையும், அரசு ஊழியர் காலனியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய போது பழுதடைந்த குடிநீர் குழாய் இணைப்புகளை சரிசெய்யும் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைத்து மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைக்கும் பணி, பாதாள சாக்கடை, மாதிரி சாலை அமைக்கும் பணிகளை அவர், நேரில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் அதிகாரிகளுக்கு விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments