சாலையில் அபாய கற்கள்!!

     -MMH


      பொள்ளாச்சி மீன்கரை சாலையில் சீனிவாசபுரம்  ரயில்வே மேம்பாலம் ஸ்கூல் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு போடாமல் காலதாமதம் செய்து வருகிறார்கள்.


       இதனால் இவ் வழித்தடத்தில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.ரோட்டில் சிறிய கற்கள் கிடப்பதால் வண்டிகள்  அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகிறது.


       மேலும் நிலை தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா...?


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments