டி மார்ட் அதிர்ச்சி முடிவு!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி !!

      -MMH 


   இந்திய ரீடைல் சந்தை கொரோனா பாதிப்புக்கு பின்பும், ஜியோமார்ட் அறிமுகத்திற்கும் பின்பும் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஜியோவின் வெற்றி பல முன்னணி நிறுவனங்கள் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை துறைக்கு இழுத்துள்ளது.


   இதில் குறிப்பாக நீண்ட காலமாக இந்திய வர்த்தகச் சந்தையில் பல்வேறு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா குழுமம் நேரடி நுகர்வோர் வர்த்தகத்தில் பெரிதும் கவனிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஈகாமார்ஸ் தளம், சூப்பர் ஆப் என அடுத்தடுத்த பணிகளைச் செய்து வருகிறது.



    இந்நிலையில் ஜியோமார்ட் ஆதிக்கத்தால் கடந்த சில மாதங்களாக வர்த்தகத்தில் பெரிய அளவிலான இழப்பைச் சந்தித்துள்ள முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான டிமார்ட் பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், தற்போது ஜியோமார்ட் ஆட்டத்தை அடக்கவும், அதன் ஆதிக்கத்தைக் குறைக்கவும் முக்கிய முடிவை எடுத்துள்ளது.டிமாட்-ன் இந்த முடிவால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானிக்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


   டிமார்ட் இந்தியாவில் கொரோனா காலத்தில் ஈகாமர்ஸ் சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் மளிகை பொருட்கள் முதல் காய்கறி வரையில் மக்கள் அனைத்தையும் ஈகாமர்ஸ் தளங்களாக ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட் ஆகிய தளத்தில் இருந்து அதிகளவில் வாங்கத் துவங்கியுள்ளனர்.


    இதன் எதிரொலியாக டிஜிட்டல் வர்த்தகத்தில் இல்லாமல் இருக்கும் டிமார்ட் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் செப்டம்பர் காலாண்டில் டிமார்ட்-ன் வருவாய், லாபம் ஆகியவை மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டுள்ளது. 


 


டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இந்தச் செப்டம்பர் காலாண்டில் கடந்த நிதியாண்டில் லாப அளவீடுகள் 38.39 சதவீதம் சரிந்து வெறும் 199 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது. இதேபோல் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 11.43 சரிவில் 5,306 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகப் பெற்றுள்ளது.இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


   இந்நிலையில் டிமார்ட் இந்திய ரீடைல் சந்தையில் ஏற்பட்டுள்ள ஈகாமர்ஸ் புரட்சியில் டிமார்ட் நிறுவனமும் முழுவீச்சில் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் படி மும்பையில் டிமார்ட் ரெடி என்னும் ஈகாமர்ஸ் சேவையை மக்களுக்கு முழுமையாகக் கொடுக்கும் திட்டத்துடன் மும்பையில் மிரா சாலை மற்றும் கல்யாண் பகுதியில் இருக்கும் 2 கடைகளை மூடிவிட்டு இக்கடைகளை Fulfilment centre ஆதாவது ஆன்லைன் சேவைக்காக மட்டுமே இயங்கும் சிறப்பு வர்த்தக பிரிவாக மாற்ற உள்ளது.


   இக்கடைகளுக்குப் பதிலாக அடுத்த 4 கிலோமீட்டர் தொலைவில் புதிய கடைகளைத் திறக்க டிமார்ட் முடிவு செய்துள்ளது.இதோடு மும்பையில் மட்டும் அல்லாமல் டிமார்ட் தனது ஆன்லைன் சேவையில் புனேவில் சில பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளது. 


   இந்திய ரீடைல் சந்தையில் ஆப்லைன் வர்த்தகப் பிரிவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக டிமார்ட் சதுரடிக்கு 36,307 ரூபாய் வருமானத்துடன் இந்தியாவின் 2வது மிகப்பெரிய லாபகரமான நிறுவனமாக உள்ளது.ஆனால் ஆன்லைன் வர்த்தகச் சந்தை பிரிவில் ஜியோமார்ட் தற்போது நாட்டில் 200 நகரங்களில் சேவை அளித்து வரும் நிலையில் டிமார்ட் ஓரே ஒரு இடத்தில் உள்ளது. 


    டிமார்ட்-ன் ஆன்லைன் சேவையில் இறங்குவதாக வெளியான அறிவிப்பு இந்நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 5.79 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஒரு பங்கு விலை 2,099 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்துள்ளது .


-சுரேந்தர்,கோவை கிழக்கு .


Comments