சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியை,அவரது கணவர் கைது!!

     -MMH


    பொள்ளாச்சி அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரான அவரது மனைவியை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.


     பொள்ளாச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் தங்கவேல்,65. இவரது மனைவி அய்யம்மாள்,55. இவர், அருகில் உள்ள கிராமத்தில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக, மனைவியை பள்ளிக்கு அழைத்து செல்லும் தங்கவேல், சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியான, 10 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.'இதுகுறித்து வெளியே சொன்னால், கொன்று விடுவேன்' என மிரட்டி உள்ளார். ஆனால், நடந்ததை பள்ளி தலைமையாசிரியரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.வெளியே சொல்லக் கூடாது' என, தலைமையாசிரியரும் சிறுமியை மிரட்டியுள்ளார்.


    சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததாக, தங்கவேலையும், கணவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அய்யம்மாளையும், 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


-சோலை,சேலம்.


Comments