கோவை பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள்!!

      -MMH


     கோவை:பயணிகள் வசதிக்காக கோவை - ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.மத்தியபிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் இருந்து அக்., 24, 31 மற்றும் நவ., 7, 14, 21, 28ம் தேதிகளில் கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜபல்பூரில் இருந்து காலை, 11:00 மணிக்கு புறப்படும் ரயில்(02198) வரும், 26, நவ., 2ம் தேதிகளில் காலை, 4:40க்கும், நவ., 9, 16, 23, 30ம் தேதிகளில் நள்ளிரவு, 2:50க்கும் கோவை வந்தடைகிறது.கோவையில் இருந்து அக்., 26, நவ., 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்(02197) இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து அக்., 26ம் தேதி மதியம், 3:30க்கும், நவ., 2, 9, 16, 23, 30ம் தேதிகளில்(திங்கள்தோறும்) மாலை, 6:00க்கும் ரயில் புறப்படுகிறது.


     பாலக்காடு, மங்களூரு, மடகான் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


-சோலை, சேலம்.


Comments