மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி!! - துபாய் செல்லும் காங்கேயம் வீரர்!!

    -MMH


     காங்கேயம்:துபாயில் நடக்கவுள்ள,மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டிக்கு,காங்கேயத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


     திருப்பூர்மாவட்டம்,காங்கேயத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(47) இளம்பிள்ளை வாத நோய்தாக்கியதில், இடது கை, இடது கால் பாதிப்படைந்தவர். திருமணமான இவருக்கு, ௨௦ வயதில் மகன் உள்ளார்.


     சிறு வயது முதலே, லட்சுமணனுக்கு கிரிக்கெட்டின் மீது தீராத காதல் ஏற்பட்டது. இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க, தனி நபர்களின் பங்களிப்போடு காங்கேயத்தில் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளார்.அதில், தன் மகன், மற்ற வீரர்களுடன் லட்சுமணனும் கிரிக்கெட் ஆடி வருகிறார்.


     இந்நிலையில், வரும் நவம்பர் மாதம், துபாயில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட தேர்வாகியுள்ளார்.தமிழகம் மட்டுமின்றி மும்பை, டில்லி, கோல்கட்டா,ராஜஸ்தான் அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.


     'லட்சுமணனுக்கு, தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ய வேண்டும்' என, கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப்,திருப்பர்.


Comments