தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது!!

      -MMH


           தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்ததன் எதிரொலியாக, கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.            இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது
இன்று 5,524 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 5,75,212 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 67 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.


            சென்னையில் இன்று மேலும் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,76,779 ஆக உயர்ந்துள்ளது.            துவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது. இதில் ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments