தீபாவளி முடிந்ததும் தொற்றானது இரண்டாவது அலையை உருவாக்குமா..!!

     -MMH


தஞ்சையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல்!!


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே இருப்பதால் மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதுகிறது. பொது முடக்க கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டதாலும்  தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதாலும் மக்கள் கூட்டம் மளிகை கடைகளிலும் ஆடைகள் விற்பனையகத்திலும் அதிகமாக காணப்படுகிறது. முகக் கவசம் அணியாமல் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்புள்ளது என்பதை அறியாமல் மக்கள் ஆங்காங்கே நெருக்கமாக இருக்கின்றனர்.


கொரோனா தொற்றானது இரண்டாவது அலையை உருவாக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதையும் பொருட்படுத்தாது மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். பட்டாசு வெடிப்பதால் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பட்டாசு தயாரிக்க களிமண் ,கரி ஆகியவை அடித்தளமாக இருந்தாலும் அலுமினியம் ,இரும்பு துகள்கள், கந்தகம், பேரியம் நைட்ரேட் பொட்டாசியம் நைட்ரேட் ஆகிய வேதிப்பொருட்களும் நிரம்பி இருக்கும் வானவேடிக்கையின் போது அதிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களால் அருகில் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் இருமல் கண்களில் எரிச்சல் தோல் அலர்ஜி போன்றவை ஏற்படும் வைரசு பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். காற்று மாசுபடுதல் நுரையீரலை பாதிக்கக் கூடிய விஷயமாக  இருப்பதால் அதுவும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்,


பாதுகாப்பாக பண்டிகையை வரவேற்பதும் கொண்டாடுவதும் எல்லோருக்கும் பாதுகாப்பு. முக கவசம்,  சமூக  இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை நமது பாதுகாப்பிற்கு சிறந்த அம்சங்களாகும்.


நாளைய வரலாறு பத்திரிக்கைக்காக,


-ராஜசேகரன், தஞ்சாவூர்.


Comments