நீதிபதி, கும்பகோணத்தில் உள்ள குளங்களை ஆய்வு செய்தார்..!

    -MMH


கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள குளங்கள் மற்றும் ஆறுகள் போன்றவற்றை ஒரு வருட காலகட்டத்தில் அனைத்தையும் தூர்வாரி சுத்தப்படுத்த கோர்ட் உத்தரவு அளித்துள்ள நிலையில் கும்பகோணம் நகரில் உபயோகம் இல்லாமல் மூடப்பட்ட நிலையில் 144 குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் ஒரு சில குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது மற்ற குளங்கள் ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளது.


நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆயி குளம் மற்றும் பொற்றாமரைக் குளம். இந்தக் குளங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக நீரை நிரப்பப்படும் அவ்வாறு இருந்த வழித்தடங்களை. ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து தண்ணீர் வருவதையே தடுத்துவிட்டனர். ஆதலால் அந்த ஆக்கிரமிப்புகளை. அகற்றி தண்ணீர் வருவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று. கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்து மகாசபை மாநிலத் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.


-வினோத் குமார்,கும்பகோணம்.


Comments