கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது - 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்!!

     -MMH 


     கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது - 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்!


செட்டிபாளையம், நவ.16 - கோவை செட்டிபாளையம் அன்புநகர் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்புநகர் ஹவுசிங்யுனிட் அருகே வரும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது.  இதையடுத்து அவரை போலீஸார் சோதனையிட்ட போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் மலுமிச்சம்பட்டி அன்புநகர் குடியிருப்பை சேர்ந்த முருகவேல்(19). என்பதும், அப்பகுதி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய அங்கு நடமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments