10,11,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் !!

     -MMH


    17-11-2020 


     அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்கூட்டியே 10, 11, 12வது வகுப்பினருக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பாடத்திட்டம் குறைப்பட்ட போதும், மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகே 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


-ஸ்டார் வெங்கட்.


Comments

Anonymous said…
Super 👌👌