பொள்ளாச்சியில் அன்னை இந்திராகாந்தி 103 வது பிறந்தநாள் விழா..!!

 

-MMH

இந்திரா காந்தி 19 நவம்பர் 1917 ல் பிறந்த இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

19-11-2020 அன்னை இந்திராகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில்  பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது அன்னை இந்திரா காந்தி புகைப்படத்திற்கு 

மாவட்ட தலைவர் M.P.சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கி அன்னை இந்திராகாந்தி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட பொதுச்செயலாளர் S.அன்சர் வரவேற்றார்.மாவட்ட துணை தலைவர் R.கோபாலகிருஷ்ணன். மாவட்ட பொருளாளர் S.ஸ்ரீதர் மாவட்ட செயலாளர் C.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்படி விழாவில் மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் S.கவிதா.மாநில பொதுக்கூழு உறுப்பினர்   K.ஜோதிமணி .மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிற்பி ஜெகதீசன்.VSRK.மோகன்.V.M.தேசிங்குராஜன்.வட்டார தலைவர் வக்கீல் K.R.வித்யாசாகர்.KRN.தேவக்குமார்.சின்னு. ராமராஜ்.தன்வீர். சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments