கஞ்சா வழக்கில் 17 பேரும் ரவுடிகள் வழக்கில்  32 பேரும் கைது!!

     -MMH 


     கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரன் உத்தரவின் பேரில் தொடர் புகார்களின் அடிப்படையில் கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் உள்ளிட்ட 49 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காவல்துறையினர் நேற்றிரவு நடத்திய சிறப்பு அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநகரம் முழுவதும் 8 தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


-சீனி,போத்தனூர்.


 


Comments