கஞ்சா விற்பனை வட மாநில பெண்கள் 2 பேர் கைது!!

  -MMH 

     கோவை. நவம்பர்.17 வட மாநில பெண்கள் கஞ்சா விற்பனை செய்த போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- "சூலூர் அருகே உள்ள முத்துகவுண்டன் புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து சூலூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று தனியார் வாட்டர் சப்ளை அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த இரண்டு பெண்கள் பையுடன் தப்பிச் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த ரூபி தேவி (34), பிந்து தேவி (40). என்பது தெரியவந்தது. 

இவர்கள் பீகாரில் இருந்து கஞ்சா கொண்டுவந்து சூலூர் பகுதியில் உள்ள வடமாநில வாலிபர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

-சீனி,போத்தனூர்.

Comments