2022 காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணி சேர்ப்பு..!

 

-MMH

2022ம் ஆண்டில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில், மகளிர் டீ20 கிரிக்கெட் அணி முதன் முறையாக இணைக்கப்பட்டுள்ளது.காமன்வெல்த் போட்டிகளை நடத்த உள்ள இங்கிலாந்துடன்,  டீ20 தரவரிசைப்பட்டியலில் முதல்  6 இடங்களை பிடித்துள்ள அணிகளும், தகுதிச்சுற்று அடிப்படையில் மேலும் ஒரு அணியும், தொடரில் பங்குபெறும்,

 என சர்வதேச கிரிக்கெட்  சம்மேளனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில், 2022ம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments