வாக்காளா் பட்டியலில் திருத்த சிறப்பு முகாம்! - 22 ஆயிரம் விண்ணப்பங்கள்..!!

 -MMH

      கோவை, புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் திருத்த சிறப்பு முகாமை பாா்வையிடும் ஆட்சியா் கு.ராசாமணி.

     கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாமில் 22 ஆயிரத்து 218 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த நவம்பா் 16ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயா் விடுபட்டவா்கள், நீக்கம், இடமாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு நாள்களாக சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கு 18 ஆயிரத்து 81 பேரும், பெயா் நீக்கத்துக்கு 1, 239 பேரும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1,449 பேரும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு 1,449 பேரும் விண்ணப்பம் அளித்தனா். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாமில் 22 ஆயிரத்து 218 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். கோவை, புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியா் கு.ராசாமணி ஆய்வு செய்தாா்.

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க முடியாதவா்கள் இணையதளம் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

-கிரி,கோவை மாவட்டம்.

Comments