பவர்ஃபுல் நிவர் புயல்! தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! தீவிர முன்னெச்சரிக்கை..!
நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, தமிழகத்தில், நாளையும், நாளை மறுதினமும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள், புதன்கிழமை பிற்பகலில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.
120 கி.மீ வேகத்தில், அதிதீவிர புயல் என்ற வகையில் வலுவான புயலாக இது கரையை கடக்கும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை 24ஆம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் உழவன் மற்றும் சேரன் ரயில்கள் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக ஆந்திர தலைமைச் செயலாளர்களுடன் காணொளி மூலம் மத்திய அமைச்சரவை செயலாளர் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
புயலின் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, தெற்கு ஆந்திரப் பகுதிகள் வரை எதிரொலிக்கும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
-பாலாஜி தங்கமாரியப்பன் ,சென்னை போரூர்.
Comments