இயற்கையின் படைப்பில் இலைகளும் மருந்தாகும்  அற்புதம்! - 3

      -MMH


இலைகளின் மருத்துவகுணம் பற்றிப் பார்த்து வருகிறோம்.


இன்று கொய்யா இலைகளின் நன்மைகள் பற்றிப் பார்ப்போமா!


 கொய்யாவின் இலைகள் (Guava leaves), ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் வல்லமைக் கொண்டவை. 


கொய்யா இலைகள் வயிற்று வலி மற்றும் வாந்தி நிவாரணம் அளிக்கின்றன:
கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவற்றை கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதால் வயிற்று வலி நீங்கும். வாந்தி சங்கடமும் சரியாகும். இதற்கு, நீங்கள் கொய்யாவின் 5-6 இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி அதன் தண்ணீரை குடிக்க வேண்டும்.


மூட்டு வலி நீங்கும்:
மூட்டு வலிக்கும் கொய்யா இலைகள் நன்மை பயக்கும். கொய்யா இலைகளை அரைத்து, விழுதாக்கி அதை மூட்டுகளில் தடவ வேண்டும். இதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.


நீரிழிவு நோய்க்கு கொய்யா இலை நல்ல மருந்து:
கொய்யா இலைகளின் நீர், நீரிழிவு நோய்க்கு (Diabetes) நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடலில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதையும் இது தடுக்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.


பல் வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.:
கொய்யா இலைகளின் நீர் பல்வலி, ஈறு அழற்சி மற்றும் வாய் புண் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. கொய்யா இலைகளை வேகவைத்து, அவற்றை தண்ணீரில் கலந்தது, வடிகட்டி அதை ஈறு மற்றும் பல்லில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம். இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாய் கொப்பளித்தாலும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால்,  பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
முடி வெடிப்புகளை தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து,  பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
 
கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி  உதிர்வது நின்று முடி பலம் பெறும்.
 
கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும்.  நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு  தருகின்றன.
 
கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை  குறைவதை நீங்கள் காணலாம்.
 
கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும்,  வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.
(தொடரும்)


  குறிப்பு: இந்த அறிவுரை உங்களுக்கு பொதுவான தகவல்களை வழங்க மட்டுமே கொடுக்கப்படுகிறது. எதையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments