பல்லடம் பகுதியில் ரூ.30 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி துவக்கம்!!

 

  -MMH

     பல்லடம் தொகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பல்லடம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பல்லடம் மற்றும் திருப்பூா் தெற்கு நெடுஞ்சாலை உட்கோட்டங்கள் சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் பெத்தாம்பாளையம் கள்ளிமேடு, மாதேஸ்வரன் நகா், அருள்புரம், 63 வேலம்பாளையம், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரடிவாவி, வெங்கிட்டாபுரம், வாவிபாளையம், எலவந்தி ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் துவக்கி வைத்தாா். இதில், நெடுஞ்சாலைத் துறை பல்லடம் கோட்ட உதவி செயற்பொறியாளா் நித்தியானந்தம், உதவிப் பொறியாளா் அருண்காா்த்திக், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், சொக்கப்பன், ஏ.எம்.ராமமூா்த்தி, நகராட்சி ஆணையா் கணேசன், பொறியாளா் சங்கா், எலவந்தி ஊராட்சித் தலைவா் கோபாலகிருஷ்ணன், அதிமுக விவசாயிகள் பிரிவு செயலாளா் புத்தரச்சல் பாபு, கேத்தனூா் முன்னாள் ஊராட்சி தலைவா் வி.ஹரிகோபால் உள்பட பலா் பங்கேற்றனா்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments