பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற 34.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!

     -MMH


     பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று 
நகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்
உடுமலை ரோடு மரப்பட்டை பாலம் முதல் கோவை ரோடு CTC மேடு வரை மேலும் நகரத்தின் முக்கிய சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக விரிவுபடுத்துவதற்கு 34.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதற்கான பூமி பூஜை காந்தி சிலை அடுத்த அன்பு சில்க்ஸ் அருகில் போடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில்  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் மேலும் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும்  நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய 'பொள்ளாச்சி ஜெயராமன்' அவர்கள்,"பொள்ளாச்சியை துபாய் போன்று அழகுபடுத்தி விடுவேன் முக்கிய  இடங்களில் ரவுண்டானா அமைத்து அப்பகுதிகளில் நீரூற்றுக்கள் லைட் செட்டிங் கொடுத்து அழகு படித்துவிடுவேன் மேலும் இப்பணியை குறுகிய காலத்தில் செய்து முடிப்பேன்" என்று உறுதியளித்தார்.


இதனைத் தொடர்ந்து பேசிய சார் ஆட்சியர் 'வைத்தியநாதன்' முதலில் இந்தத் திட்டம் மேம்பாலம் வருவதற்கான திட்டமாக இருந்தது மேம்பாலம் வந்தால் பொள்ளாச்சி இரண்டாக ஆகிவிடும் மேலும் வியாபார ரீதியாகவும் பிரச்சினை வரும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை கைவிட்டு இப்போது இருக்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த CM பார்வைக்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments