ஜோ பைடென் 46 ஆவது அமெரிக்கா ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்!

         -MMH 


     வாஷிங்டன் டி.சி : ஐந்து நாட்களாக உலகெயெல்லாம் உச்சி முனையில் நிற்கவைத்த பிறகு  'ஜோசப் ரொபினெட் பைடன் ஜூனியர்' என்கிற 'ஜோ பைடேன்'(78) அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கு தகுதி பெற்றார். கூடுவே கமலா ஹாரிஸ் வரலாற்று சாதனை படைத்து அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் முதல் பெண்மணி ஆவார்.



     "அமெரிக்கா, என்ற  பெரிய நாட்டை வழிநடத்த நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். எனக்கு முன்னால் வேலை கடினமாக இருக்கும், ஆனாலும் நான் எல்லா அமெரிக்கர்களுக்கும் ஒரு ஜனாதிபதியாக இருப்பேன் நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும். நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன்." அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த பின்னர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜோ பைடன்.


அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பைடென் இருப்பார். கமலா ஹாரிஸ் முதல் பெண் மற்றும் துணைத் ஜனாதிபதியாக இருப்பார். டொனால்ட் டிரம்ப் மறுதேர்தலில் தோல்வியடைந்த 10 வது அமெரிக்க ஜனாதிபதியாவார். கடந்த முறை, குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் 1992 இல் பில் கிளிண்டனுக்கு மறுதேர்தலில் தோற்றார்.


-நம்ம ஒற்றன்.


Comments