ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய டேங்கர் மிதவை!!

     -MMH 


     ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய டேங்கர் மிதவை பலமணி போராட்டத்திற்குப்பின் விற்கப்பட்டது.


பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுகளை தொடர்ந்து புதிதாக ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு சார்பில் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கான்க்ரீட் கலவைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்காக டேங்கர் மிதவைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டேங்கர் மிதவைகள் பாதுகாப்பாற்ற முறையில் கடலில் நிறுத்தப்படுவதால் அவை பாலத்தின் தூண்களில் மோதி விபத்து ஏற்படுகிறது.


இந்த நிலையில் நேற்று காலை டேங்கர் மிதவை ஒன்று பாலத்தின் தூண் மீது மோதியது. அதனை தொடர்ந்து ஊழியர்கள் 4 நாட்டுப் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு டேங்கர் மிதவையை மீட்டு கரைக்கு இழுத்து சென்றனர். இதனையடுத்து பலத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


-ஸ்டார் வெங்கட்.


 


Comments