ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தினக் கூலி ரூ.510 வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்!!!

     -MMH


ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தினக் கூலி ரூ.510 வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்!!!


     காங்கயத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி, தினசரி ஊதியமாக ரூ. 510 வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பூா் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை சங்கத்தின்(சிஐடியூ ) மாவட்டத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.


இதில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி தினசரி ஊதியமாக ரூ.510 வழங்க வேண்டும், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கங்களை எழுப்பினா்.


இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் அன்பு, மாா்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளா் திருவேங்கடசாமி உள்பட தூய்மை பணியாளா்கள் 100 போ் கலந்து கொண்டனா்.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments