5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - காவலாளி போக்சோ சட்டத்தில் கைது!!

  -MMH

     கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி போக்சோ சட்டத்தில் கைது.

கோவை வெள்ளலுர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் சிங்காநல்லூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று பணியில் இருந்த போது அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த 5 வயது சிறுமியை ரவிச்சந்திரன் தூக்கிச்சென்று பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இதைக் கண்ட சிறுமியின் பெற்றோர் ரவிச்சந்திரனை பிடித்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு அவரை  சிங்காநல்லூர் போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ரவிச்சந்திரனை கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவுச் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-சீனி,போத்தனூர்.

Comments