சாலை ஓரத்தில் பயன் படுத்திய ஊசிகள்!! -பொதுமக்கள் ஜாக்கிரதை!!

     -MMH 


கோவை மாவட்டம் 
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பொள்ளாச்சி அடுத்த ஆட்சிப்பட்டி அருகே உள்ள ஜீவா நகர் கோவில் அருகே நெடுஞ்சாலை  பகுதியில் பயன்படுத்திய ஊசியை சாலையின் ஓரமாக போட்டு சென்றுள்ளனர். இது மருத்துவமனைகளில் பயன்படுத்திய ஊசியா அல்லது வேறு ஏதேனும் தவறான பழக்கத்திற்கு பயன்படுத்திய ஊசியா என்று தெரியவில்லை.இதை எடுத்து யாரேனும் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி வருவதே தொடர்கதையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் மெயின் ரோட்டின் அருகில் கொட்டி இருப்பது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென  இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments